ரூபாய் சுமார் பத்து லட்சம் மதிப்பில் பவர் கிரீட் CSR நிதியில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

ரூபாய் சுமார் பத்து லட்சம் மதிப்பில் பவர் கிரீட் CSR நிதியில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2026-01-24 08:47 GMT
ரூபாய் சுமார் பத்து லட்சம் மதிப்பில் பவர் கிரீட் CSR நிதியில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. கரூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில், இந்திய மின் பகிர்மான நிறுவனக் குழுமமான Power Grid Corporation of India Ltd. நிறுவனத்தின் CSR நிதி உதவியின் மூலம் சுத்தம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) orன்ற தலைப்பின் கீழ் ரூ.9.98.750/- மதிப்பில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டு, அதற்கான உபகரணங்கள் வழங்கும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் சா.சுதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் செழியன் முன்னிலை வகித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார். பவர் கிரிட் தென் மண்டல தலைமைப் பொது மேலாளர் .கணேசன், மனிதவள மேலாண்மை பொது மேலாளர் திருதன்வீர் பண்டயாப்புரத் மற்றும் துணைப்பொது மேலாளர் அருள்குமரன் சட்ட ஆகியோர் ஆய்வக உபகரணங்களை கல்லுரி முதல்வர் முனைவர் சா. சதா அவர்களிடம் வழங்கி னார். உணவு ஊட்டச்சத்து துறைத் தலைவர் மற்றும் முனைவர் ஜாகிர் உசேன். கல்லூரி ஆராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்த்திகேயன், கல்லூரி நூலகர் முனைவர் சரவணன். ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறைப் பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். புதிய உபகரணங்களுடன் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை பவர் கிரிட் தென் மண்டல தலமைப் பொது மேலாளர் கணேசன், மனிதவள மேலாண்மை பொது மேலாளர் தன்வீர் பண்டயாப்புரத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த ஆய்வக திறப்பு விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களின் ஆரோக்கிய வளர்ச்சி, சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள். நடைமுறைப் பயிற்சிகள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளன. புதிய ஆய்வகத்தின் மூலம் நோய் தடுப்பு, சுகாதார பரிசோதனைகள். தூய்மை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சுத்தமான சூழலை உருவாக்கவும் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டது. துறையின் வளர்ச்சிக்கும். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் இந்த நிதி உதவி பெரும் துணையாக அமையும் என்று கல்லூரி முதல்வர் பாராட்டினார். எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக இந்த திட்டம் Power Grid அமைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும். நடப்பாண்டில் சுத்தம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விழாவில் தெரிவிக்கப்பட்டது. சமூக நலனுக்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக இந்த ஆய்வகம் அமையும் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது..

Similar News