ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் சிறப்பு பூஜை..

ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் சிறப்பு பூஜை..;

Update: 2026-01-24 12:02 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர்,மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளிக்கவச துளசி மாலை அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

Similar News