திருச்செங்கோட்டில் தவெகவினர் வைத்த பேனருக்கு ஆட்சேபம் தெரிவித்து போலீசில் புகார்
திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தினர் வைத்த புதிய தேர் வெள்ளோட்டம்மாற்றத்திற்கான முன்னோட்டம் என்ற வாசகங்கள் அடங்கிய தேர் படமும் சுவாமி படமோ இல்லாமல் கட்சியினர் படங்கள் மட்டுமே இருந்த பேனரை அகற்றக்கோரி போலீசில் புகார்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழாவிற்கு புதிய தேர் உருவாக்கப்பட்டு அந்தத் தேரின் வெள்ளோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் தேரோட்டத்திற்கு பக்தர்களை வரவேற்கும் விதமாகபுதிய தேர் தேர் வெள்ளோட்டம் மாற்றத்திற்கான முன்னோட்டம் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களை வருக வருக என வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் பேனர்களில் இருக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ளது.மேலும் இந்த பேனரில் சுவாமி படமோ தேரின் படமோ எதுவும் இல்லாமல் அரசியல் கட்சி விளம்பரம் போன்று அமைந்திருந்ததாக தகவல் பரவிய நிலையில் நேற்றுநள்ளிரவில் நகராட்சியினர் பேனரை அகற்றினார்கள். குறித்த தகவல் அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் நள்ளிரவிலும் விரைந்து வந்து பேனர் வைப்பதற்கு நகராட்சி இடம் பணம் கட்டியுள்ளதாகவும்முன்னேற்றம் என்பது அனைவருக்கும் பொதுவான வார்த்தை தான் என வாதிட்டார் இதனை அடுத்து பேனர் அகற்றப்பட்ட இடத்திலேயே இறக்கி திருப்பி வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில்இன்று திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் அவர்களிடம் நியமன மாற்றுத் திறனாளி கவுன்சிலர் பாரத்மற்றும் விசி ஆறுமுகம் ஆகியோர் பேனர் குறித்த புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சியிலும் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் இந்த பிளக்ஸ் பேனர் முகம் சுளிக்கும் வகையிலும் அனைத்துக் கட்சிமக்களும் கலந்து கொள்ளும் இடத்தில் மாற்றத்திற்கான முன்னோட்டம் என்பது தனிக்கட்சி விளம்பரம் போல் அமைக்கப் பட்டுள்ளது எனவே அதனை அகற்ற வேண்டும் என்று புகார்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரால் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவில் அரசியல் பேசக்கூடாது என பொங்கல் விழா கமிட்டி குழு தலைவர் கூறியது வைரலான நிலையில் தற்போது பேனர் பிரச்சனை வைரல் ஆகி வருகிறது.