பறக்கும் படை சோதனை ரூ. 1 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-24 08:27 GMT
வாசுதேவநல்லூரில் பறக்கும் படை சோதனை ரூ. 1 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி சோதனை சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் வந்தவரிடம் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதற்கு முறையான ஆவணம் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்தவர் சிவகிரி தெற்கு ரதவீதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகேஸ்குமார் (வயது 25) என்றும், அவர் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத் திற்கு வசூல் செய்வதற்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1லட்சத்தை பறக்கும் படை அலுவலர் மாலதி, சங்கரலிங்கம், காவலர் சிதம்பரம் ஆகியோர் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் மாடசாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News