தமிழகத்தில் பிளஸ்-1தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் 261பள்ளிகளை சேர்ந்த 21,767 மாணவிகள் தேர்வு எழுதியதில்20642 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 94.83சதவீதமாகும். 82 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் 10360 பேர் தேர்வு எழுதியதில் 9518 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 91.87 சதவீதமாகும். மாணவிகள் 11407 பேர் தேர்வு எழுதியதில் 11124பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 97.52 சதவீதமாகும். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் தமிழக அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் 60பள்ளிகளைச் சேர்ந்த 6312 மாணவ மாணவர்கள் தேர்வு எழுதியதில் 5786பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 91.67 சதவீதமாகும். அரசுபள்ளிகளில் 5 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.3032மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2649 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 87.37சதவீதமாகும். 3280மாணவிகள் தேர்வு எழுதியதில் 3137பேர் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விழுக்காடு 95.64 சதவீதம் ஆகும். அரசு பள்ளிகளில் தமிழக அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.