திருப்பரங்குன்றத்தில் 1ஆம் தேதி முன்னாள் முதல்வர் பிரச்சாரம்
தமிழக முன்னாள் முதல்வர் நான்காம் கட்ட சுற்று பயணத்தை வரும் 1ம்தேதி திருப்பரங்குன்றத்தில் தொடங்குகிறார்;
தமிழகத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு தொகுதிகளில் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்ற தலைப்பில் சுற்று பயணம் செய்து வருகிறார். நான்காம் கட்ட சுற்றுபயணத்தை வரும் செப்டம்பர் 1ம் தேதி திங்கட்கிழமை திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதியிலும், 2 ம் தேதி மேலூர் தொகுதியிலும், 4ம் தேதி சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் .இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.