கோவை: மீலாது நபி விழா உற்சாக கொண்டாட்டம் – 1 லட்சம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது !

ஜமாத் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச பிரியாணி வழங்கப்பட்டது.;

Update: 2025-09-06 06:12 GMT
கோவை மாவட்டத்தில் மீலாது நபி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோட்டைமேடு பகுதியில் நடந்த ஊர்வலத்தில் குழந்தைகள், சிறுமிகள் புத்தாடைகள் அணிந்து மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைதி பேரணியில் கலந்தனர். மதராசாக்களில் படிக்கும் இஸ்லாமிய சிறுவர்கள் நபி பெருமையை விளக்கும் பாடல்கள் பாடி, ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. கோவை, உக்கடம், ஆத்துப்பாலம், கரும்பு கடை போன்ற பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது. விழாவை கொண்டாடும் விதமாக, ஜமாத் சார்பில் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.

Similar News