புளுதியூரில் 1. 20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
கோபிநாதம்பட்டி அருகே புளுதியூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் 1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் ஜனவரி 8 நேற்று காலை கூடிய வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம்,நாமக்கல், திருவண்ணாமலை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகள் மற்றும் கறவை மாடுகள், எருமை மாடுகள், நாட்டுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது மாடுகள் 8,500 முதல் 60000 ரூபாய் வரையிலும் ஆடுகள் 6500 முதல் 18000 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 1.20 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.