ஏத்தக்கோவில் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிரம்பியதால் போக்குவரத்து பாதிப்பு

மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பப்பட்டி, ரெங்கராம்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தக்கோவில் கிராமங்களுக்கு டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2024-10-22 02:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் இரவு இடி மின்னலுடன் 10 செ.மீ., மழை கொட்டியது. மழையால் பள்ளி வளாகங்கள் - ஏத்தக்கோவில் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிரம்பியது.ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்து வருகிறதுவைகை அணை நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யாததால் மூல வைகை ஆற்றில் குறைவான நீர்வரத்து உள்ளது. மூல வைகை ஆற்று நீரும் இந்த ஆண்டில் நேற்று முதல் முறையாக வைகை அணை சேர்ந்துள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு லேசான தூரலுடன் துவங்கிய மழை படிப்படியாக அதிகரித்து பலத்த மழையாக அதிகாலை 12:00 மணி வரையும், பின் அதிகாலை 4:30 மணிவரை சாரல் தொடர்ந்தது. நேற்று முன்தினம் ஒரே இரவில் ஆண்டிபட்டியில் 10 செ.மீ.,மழை பதிவானது. பலத்த மழையால் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் ரோட்டில் ரயில்வே சுரங்க பாலம் நிரம்பியது.பாலத்தை கடந்து வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரயில்வே நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணி மதியத்திற்கு பின்பும் தொடர்ந்தது. பாலத்தில் மழை நீர் தேங்கியதால் மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பப்பட்டி, ரெங்கராம்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தக்கோவில் கிராமங்களுக்கு டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள், மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகங்களில் தேங்கிய நீர் மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது. டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர்., நகரில் தென்னை மரத்தை மின்னல் தாக்கியதால் கருகியது. இரவில் மின்வினியோகம் பாதிப்பு, தாழ்வான பகுதியில் புகுந்த மழை நீரால் பலரும் சிரமப்பட்டனர்.

Similar News