திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று 10 மாதங்களாகியும் இதுவரை இரண்டவது மாவட்ட ஆட்சியரின் பெயர் பலகை வைத்துள்ள ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினர
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று 10 மாதங்களாகியும் இதுவரை இரண்டவது மாவட்ட ஆட்சியரின் பெயர் பலகை வைத்துள்ள ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று 10 மாதங்களாகியும் இதுவரை இரண்டவது மாவட்ட ஆட்சியரின் பெயர் பலகை வைத்துள்ள ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினர். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டு வருவாய் கோட்டங்கள், மூன்று பேரூராட்சிகள், நான்கு தாலுகாக்கள், ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் என தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து மாவட்ட ஆட்சியராக சிவன் அருள், அமர்குஷ்வாக, பாஸ்கர பாண்டியன், என மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மாறி தற்போது கடந்து பத்து மாதங்களுக்கு முன்பு நான்காவது மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் இரண்டாவதாக பணியாற்றிய அமர்குஷ்வாக அவர்களின் பெயர் உள்ளது. இதுவரை ஒரு மாவட்ட ஆட்சியரின் பெயர் பலகையை கூட மாற்ற இயலாமல் ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகள் மெத்தனப்போக்காக செயல்படுகின்றனர் என பொதுமக்கள் மட்டும் இன்றி சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..