திருப்பத்தூரில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
திருப்பத்தூரில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஆட்சியில் அனுப்பி வைத்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை ஆட்சியர் கொடியாசித்து துவக்கி வைத்தார் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சேதங்கள் அடைந்து நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் பத்து லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது