நீலகிரி மாவட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தை கைவிடக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
இத்திட்டத்தால் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் புகார்;
நீலகிரி மாவட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தை கைவிடக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு... இத்திட்டத்தால் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் புகார் கடந்த, 2013ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ், 7000 கோடி ரூபாய் மதிப்பில், 2000 மெகாவாட் மின் திட்டமான, 'சில்ஹல்லா' மின் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்திற்காக, எடக்காடு அருகே பிக்குலி, மஞ்சூர் அருகே அன்னமலை கோவில் அடிவாரத்தில் அணை கட்டவும்; மஞ்சூர், கோவை சாலையில் பெரும் பள்ளத்தில் மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தால், 1000 ஏக்கர் பரப்பில் தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாய தொழில் சார்ந்தோர் என, 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர் எனவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டியும், பாறைகளை வெடி வைத்து வெடித்து ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால், ஏற்படக்கூடிய அதிர்வுகளால் இயற்கை பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இப்பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியாகும். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தினை கைவிடக் கோரி என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.