கரூரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யும் தனியார் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு.
கரூரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யும் தனியார் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு.;
கரூரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யும் தனியார் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு. தமிழர் எழுச்சி கழக மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் வந்த அமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கரூர் பேருந்து நிலையம் அருகாமையில் இரண்டு டாஸ்மார்க் கடை அருகே தனியார் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்யக்கூடாது என்ற நிலையில் , இந்த பார்களில் விடிய விடிய சட்டவிரோத விற்பனையும் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்யும் வழக்கமும் அங்கு உள்ளது. பேருந்து நிலையம் அருகாமையில் இருப்பதால் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகள் , பெண்கள் ஆகியோருக்கும் இடையூறாக இருப்பதாகவும் ,இதனால் பல சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் , குற்றச்செயல்கள் நடைபெறுவதாலும் சட்ட விரோத பார்கள் நடத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதே போல மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சந்து கடை என்ற பெயரில் நடக்கும் இந்த வியாபாரங்களினால்அரசுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய வருவாயும் தடைபட்டுள்ளது. எனவே சட்ட விரோத பார்களை நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இரவு 10 மணிக்கு மேல் மறுநாள் மதியம் 12 மணி வரை நடைபெறும் இந்த சட்ட விரோத விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.