வேன் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை!
பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (46), வேன் டிரைவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த வேணுகோபால் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி கோகுலகிருஷ்ணன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.