சிவகாசியில் 10 பைசா நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதியிலே நிறுத்தப்பட்ட திட்டம்.... பிரியாணி வாங்க ஆண்கள் பெண்கள் முண்டியடித்ததால் பரபரப்பு

சிவகாசியில் 10 பைசா நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதியிலே நிறுத்தப்பட்ட திட்டம்.... பிரியாணி வாங்க ஆண்கள் பெண்கள் முண்டியடித்ததால் பரபரப்பு...;

Update: 2025-09-11 17:43 GMT
சிவகாசியில் 10 பைசா நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதியிலே நிறுத்தப்பட்ட திட்டம்.... பிரியாணி வாங்க ஆண்கள் பெண்கள் முண்டியடித்ததால் பரபரப்பு... சிவகாசி பேருந்து நிலையம் பின்புற முள்ள காந்தி சாலையில் தனியார்( சிவகண்ணன் ரெஸ்டாரண்ட் ) அசைவ உணவு விடுதிக்கிளை புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா தினத்தன்று மட்டும் 10- பைசா நாணயம் கொண்டுவரும் முதல் 200- வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதனைப் பெற்றுக் கொண்டு சிக்கன் பிரியாணி வழங்கப்படும், 2- சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், 2- மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் 65 இலவசம் வழங்கப்படும் என்ற திட்டம் உணவு விடுதியினரால் முன்னறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக 10- பைசா நாணயத்தை க் கொடுத்து பிரியாணிப் பார்சல்களை வாங்கிச் செல்ல ஆண்களும், பெண்களும் வெயிலின் கொடுமையைக்கூடப் பொருட்படுத்தாமல் கைக்குழந்தையோடு குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் வெகு நேரமாக காத்திருந்தனர். சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணைமேயர் விக்னேஷ்பிரியா ஆகியோர் நேரில் வந்து உணவு விடுதியின் புதியக் கிளையை திறந்து வைத்து குத்து விளக் கேற்றியவுடன், உணவு விடுதி நிர்வாகத்தினர் சார்பாக பிரியாணிகளை வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி தொடங்க காலதாமதமானதால் ஆரம்பத்தில் வரிசையில் வந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டுவந்த10- பைசா நாணயத்திற்கு பிரியாணி பார்சல் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஆர்வத்தில் திடீரென முண்டியடித்து, கடையின்நுழைவு வாயிலில் கட்டப்பட்டிருந்த அலங்காரத் தோரண பலூன்களை உடைத்து, கண்ணாடிக் கதவு வழியாக உணவு விடுதியி னுள் அத்துமீறி நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை கட்டுப்படுத்தி யதுடன், ஆஃபர் முறையில் பிரியாணி வழங்கும் திட்டத்தை பாதியிலேயே நிறுத்த சொல்லி வலியுறுத்தியதால், உணவு விடுதியின் கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டு திட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சலுகை விலை பிரியாணிய நம்பி வேலைக்கு செல்லாமல் ஊதியத்தை இழந்து வந்த தங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாக பெண் பட்டாசு தொழிலாளிகள் ஆதங்கமடைந்தனர்.

Similar News