ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து 100 பவுன் நகை,இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் பணம் கொள்ளை உடையார்பாளையம் போலீசார் விசாரணை.

ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து 100 பவுன் நகை,இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை உடையார்பாளையம் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்..;

Update: 2025-02-14 14:04 GMT
அரியலூர், பிப்.14- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாளை சேர்ந்தவர் வசந்தா(68). இவரது கணவர் நெய்வேலியில் என்எல்சியில் போர் மேன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர் மூன்று மகள்களும் திருமணம் ஆன நிலையில் இவரது இளைய மகள் கணவனை இழந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.நிலையில் வசந்தாவின் நகைகள் மற்றும் பணம் மகளின் நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவைகள் வீட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வசந்தா தனது வீட்டை பூட்டி சாவியை அருகில் வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் பணம், கபோர்டில் குச்சிபையில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மலர் உதவியுடன் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மோப்பநாயானது சிறிது தூரம் ஓடி சாலையில் படுத்துக்கொண்டது அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Similar News