ராசிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மன் பிரியாணி கடையில் 100க்கும் மேற்பட்ட பிரியாணி பிரியர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

ராசிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மன் பிரியாணி கடையில் 100க்கும் மேற்பட்ட பிரியாணி பிரியர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வாங்கிச் சென்றனர்.;

Update: 2025-11-27 14:34 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் புதிதாக அம்மன் பிரியாணி என்ற பெயரில் புதிய கிளை திறப்பு விழாவானது நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு பாஸ்மதி சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என சிறப்பு சலுகையானது கடையினர் அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 11.மணி முதல் நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கிச் சென்ற நிலையில் மதிய வேளையில் பிரியாணியானது முடிந்துவிட்டது. பின்னர் கடை உரிமையாளர்கள் மீண்டும் பிரியாணியை தயார் செய்து இந்த சலுகை அறிவித்திருந்த நிலையில் மீண்டும் பிரியாணி வாங்க சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக 100க்கும் மேற்பட்ட பிரியாணி பிரியர்கள் நீண்ட வரிசையில் வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருந்து பின்னர் பிரியாணி வாகனம் வந்த பிறகு பிரியாணி பிரியர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் காத்திருந்து இந்த பிரியாணியை வாங்கி சென்றனர். இதனால் பேருந்து நிலையம் செல்லும் வழியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News