மேலப்பாளையம்- கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000 கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி.
மேலப்பாளையம்- கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000 கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி.;
மேலப்பாளையம்- கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000 கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி. வரும் 7ஆம் தேதி திங்கள் கிழமை கரூர் அடுத்த மேலப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லைஅரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோவிலின் ,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் , மேளதாளம் தாரை தப்பட்டை முழங்க தேவராட்டம் ஒயிலாட்டம் ஆடியபடி ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். இந்த ஊர்வலத்தில் கருப்பண்ணசாமி மற்றும் அம்மன் வேடமிட்ட கலைஞர்கள், நடனமாடும் குதிரைகள், பட்டத்து யானை ஒட்டகங்கள், ஜல்லிக்கட்டு காளைகள் ஊர்வலத்தில் பங்கேற்றது. வரும் 7- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.