சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் கோவில் கலசம் திருட்டு

மாயனூர் போலீசார் விசாரணை;

Update: 2025-12-16 11:01 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் அமைந்துள்ள சௌந்தரநாயகி சங்கரேஸ்வரர் கோவில்,சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலை உச்சியில் அமைந்துள்ள கோவில் பழமையான கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பழமையான மலை உச்சியில் கலசம் இருந்த வரை சுற்றுவட்டார ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இதுவரை இடி மின்னல் தாக்கியது இல்லை எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

Similar News