உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வலையொளி வாயிலாக
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வலையொளி வாயிலாக உரையாற்றினார்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வலையொளி (YOUTUBE) வாயிலாக உரையாற்றினார். இந்த நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் உங்கள் அனைவரிடமும் இணைய வழியில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி ஒரு அழியாத செல்வம். “வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது” என்று கல்வியின் உடைய பெருமையை நம் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர்வாகவே கூறுகிறது. ஏன் இந்த கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறார்கள், ஏன் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்கிறார்கள் என்றால், கல்வியில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கின்றது. இந்த கல்வியாண்டில் தொடக்கத்தில் குறிப்பாக இன்று இந்த இணைய வழியில் இருக்கக்கூடிய 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் நீங்கள் கல்வியின் உடைய மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள். யார் சிறந்த அறிவாளிகள் என்று கேள்விக்கும் நிறைய பதில்கள் இருக்கிறது. ஆனால், அடுத்தவர்களுக்கான அனுபவங்களிலிருந்து தங்களுக்கான பாடத்தை கற்றுக் கொள்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகள் ஆவர். சிறப்பான மதிப்பெண் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஆனால் அதை விட மிகவும் முக்கியம் அவர்களுக்கு எதிர்காலத்தில் உயர்கல்வியில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தான். தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று.எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை. பணியின் மூலமாகவும், கல்வின் மூலமாகவும் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு என்பது 17 வயது முதல் மருத்துவத்துறையிலே அல்லது சட்டக்கல்லூரியிலோ, இந்தியாவிலே தலைசிறந்த கல்லூரியில் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு அடுத்து அவர்கள் வாழக்கூடிய 80 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் கிடைக்கும், அதனால் உழைப்பையும், பலனையும் கணக்கிட்டால் வாழ்க்கையில் எப்போதுமே கிடைக்க கூடிய பலனாகும். பள்ளி கல்லூரி மற்றும் கல்லூரி கல்வியாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும், குறைவான முயற்சியில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்ககூடிய 10 வகுப்பு 11,12 வகுப்பில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதற்கான படிப்பிற்கான வாய்ப்பாக மட்டுமே இருக்கும். எனவே, கனவுகளை அடைவதற்குரிய சாத்தியக்கூறுகள், புரிதலும், வழிகாட்டுதலும், கிடைக்கும் கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுத்து கல்வி பயணத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். JEE, NET மற்றும் பொறியியல் தேர்வுகளில் நாம் பெறும் Cutoff மதிப்பெண்களை பெறுவதால் மருத்துவத்துறையில் மூலம் என்ன படிக்கலாம் என்பதை நமக்கு தேர்ந்தெடுக்க ஒரு தூண்டுகோளாகும். இந்தியாவினுடைய ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனத்தின் மூலம் மெட்ரிக், சி.பி.எஸ், ஸ்டேட்போர்டு ஆகிய கல்வி நிறுவனங்களில் எந்த வகையான வினா எழுதுவதற்கும் அல்லது ஒரு வரியில் வினா அளிப்பதற்கும் ஏற்றவாறு தன்னுடைய கல்வி அறிவினை உபயோகிக்க வேண்டும். தொலை பேசி நமக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தாலும், அதனை நமக்கு ஏற்றவாறு நன்மை பயக்கும் விதமாக கொண்டு செல்வது என்பது தான் கற்றல் திறன். நாம் என்னவாகலாம் என்பதை நமக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் நான் முதல்வன் திட்டத்தில் எவ்வாறு மாணவர்கள் பயன் அடைகிறார்கள் என்பதை நேரடியாக எடுத்து சொல்லும் வகையில் கல்வியின் இலக்கினை மாணவர்கள் அடைய வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதை மிகவும் வருத்தம் அடைவதற்குரிய விசயமாக இருந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானம், போன்ற படிப்புகளில் சரியான வழிகாட்டுதல்களை கற்றால் நீங்கள் வாழ்வில் நன்மை அடையலாம். நமது மாவட்டத்தினுடைய குழந்தைகள் மகிழ்ச்சியை பெறக்கூடிய குழந்தைகளாக, கல்வியின் வழியாக மிகப்பெரிய வாய்ப்புகளை பெறக்கூடிய குழந்தைகளாக கல்வி கற்கும் கால கட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும் உங்களால் எவ்வளவு முடியுமோ உங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் தான் வெற்றிக்கு அடிப்படை, ஒரு மணி நேரம் கல்விக்காக இருக்கும் நேரம் தான் தன்னுடைய வாழ்நாள் வெற்றிக்கு வழி வகுக்கும், மதிப்பெண் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் வாழ்நாள் நேரத்தினை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.