அய்யர்மலையில் 1017 படிகளில் 300 யோகாசனங்களை சுழற்சி முறையில் செய்து கொண்டு மலை உச்சி சென்று சாமி தரிசனம் செய்த 8 வயது சிறுவன்

யோகா விழிப்புணர்வு, உலக அமைதி, விவசாயம் செழிக்க வேண்டி புதிய முயற்சி;

Update: 2025-05-17 08:13 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் மகன் ராகவன் (8). இவர் தண்ணீர்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு முடித்து 3 ஆம் வகுப்பு செல்ல உள்ளார். யோகாசனத்தில் பயிற்சி பெற்ற இந்த சிறுவன் யோகாசனம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக மக்கள் நலன் பெறவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் வேண்டி யோகாசனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாமி தரிசனம் செய்ய பெற்றோர் சம்மதத்தில் முடிவு செய்தனர். அதனையடுத்து நேற்று அய்யர்மலையில் 1017 படிகள் கொண்ட ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் மலை உச்சியில் சாமி தரிசனம் செய்ய வேண்டி அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு யோகாசனம் என சூரிய நமஸ்காரம், குரு வணக்கம், பத்மாசனம், சக்ராசனம், தனுராசனம், சிரசாசனம், சர்வங்க ஆசனம், விருட்சாசனம், பூர்ணசரபா சனம், கண்ட பேருண்டா சனம் போன்ற 300 யோகாசனங்களை சுழற்சி முறையில் ஒவ்வொரு படியாக செய்து கொண்டு மலை உச்சி நோக்கி சென்றார் சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள் சிறுவனை உற்சாகப்படுத்தியவாறு பின் தொடர்ந்து சென்றனர்.

Similar News