மேலூர் அருகே 108 சங்கபிஷேக வழிபாடு.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டி சிவாலயபுரத்தில் இன்று சோமவார 108 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு இன்று (டிச.9) நடைபெற்றது. இன்று பகல் 3.30 மணிக்கு சங்கரலிங்கம் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக 108 சங்குகளில் தீர்த்தம் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் செய்தனர்.பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி, அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.