தேனி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜி.உசிலம்பட்டி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
அதிகாலை 3.45 மணியளவில் துவங்கி நடந்த பூஜையில் கரும்புச்சாறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்க அபிஷேகங்கள் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.;
தேனி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜி.உசிலம்பட்டி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி அருள்மிகு நல்லம்மாள் கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான அருள்மிகு சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தல விருட்சமாக சுயம்பு வில்வம் மரம் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் , பௌர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில் உள்ள சிவலிங்க சுவாமிக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடந்தது. இதில் பிப்.26 அன்று இரவு 7.40 மணியளவில் முதல் கால பூஜை யில் பச்சரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், திருநீர், சிறப்பு அபிஷேகமாக பஞ்சகாவியம், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடந்தது. இதே போன்று நடந்த 4 கால பூஜையில் சிறப்பு அபிஷேகங்களை தவிர்த்து பூஜைகள் நடந்தது. இதில் 10.25 மணியளவில் நடந்த இரண்டாம் கால பூஜையில் சிறப்பு அபிஷேகம் பஞ்சாமிர்தம் நடந்தது. 12.45 மணி அளவில் நடந்த மூன்றாம் கால பூஜையில் சிறப்பு அபிஷேகம் தேன் நடந்தது. அதிகாலை 3.45 மணியளவில் துவங்கி நடந்த பூஜையில் கரும்புச்சாறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்க அபிஷேகங்கள் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இந்நாளை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியில். இருந்து இன்று காலை 6மணிவரை தூங்காமல் விரதம் இருந்த பக்தர்கள் சிவபுராணம் பாடி சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.