அரியலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை   ஊழியர்களுக்கு பாராட்டு

அரியலூர் அருகே 108 ஆம்புலாட்சியில் பிறந்த ஆண் குழந்தை தாய் சே இருவரையும் நலமுடன் மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.;

Update: 2025-05-15 10:02 GMT
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டம்  மறவனூர் கிராமம் விஜயகுமார்  மனைவி பூமாதேவி (22) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் போது பிரசவ வலி வந்துள்ளது இதனை அடுத்து விஜயகுமார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள வாரணாவாசி பஞ்சாயத்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பூமாதேவியை ஆம்புலென்ஸில்  ஏற்றி உள்ளனர் பிரசவ வலி அதிகரித்த நிலையில் இருந்ததால்  அவசரம் கருதி ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோவிந்தசாமி ஆம்புலன்ஸ் பைலட் தனபால் உதவியுடன்  பிரசவம் பார்த்துள்ளார். பூமாதேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் அனுமதித்துள்ளனர்.  அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவசர நிலை கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். :

Similar News