கரூரில் 108.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூரில் 108.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூரில் 108.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. அதேபோல தமிழக முழுவதும் கோடையில் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெப்பச்சலன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூரில் 37.60 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 3.00-மில்லி மீட்டர்,க. பரமத்தியில் 1.60 மில்லி மீட்டர், குளித்தலையில் 29.00 மில்லி மீட்டர், தோகை மலையில் 11.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 26.00 மில்லி மீட்டர் என மொத்தம் 108.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனுடைய சராசரி அளவு 9.02 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.