ஆண்டிபட்டியில் உள்ள ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 வது ஆண்டு விழா .

விளையாட்டுப் போட்டிகள் திருக்குறள் ஒப்புவித்தல் , கவிதை , கட்டுரை , பாட்டு , ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.;

Update: 2025-03-01 14:41 GMT
ஆண்டிபட்டியில் உள்ள ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 வது ஆண்டு விழா . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11 வது ஆண்டு விழா கோலாகலமாக லேசர் மின்னொளியில் கொண்டாடப்பட்டது விழாவிற்கு தேனி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமை தாங்கி விளையாட்டு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் பிரியா தங்கப்பாண்டியன், முன்னாள் தாளாளர் தங்கபாண்டியன் அவர்களை நினைவுகூர்ந்து பின்னர் வரவேற்புரை ஆற்றி, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக தேனி மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் மருத்துவர் அன்பு குமார், ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் ,வழக்கறிஞர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் , கவிதை , கட்டுரை , பாட்டு , ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பை, பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பல்வேறு அலங்கார வண்ண உடைகள் அணிந்து பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் விழாமேடையில் கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் பள்ளி மாணவ மாணவியர்கள் அற்புதமாக செய்து காண்பித்தனர். விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Similar News