சீர்மரபினர் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்த்திட ஜீன் 11ம் தேதி அன்று சிறப்பு முகாம்
சீர்மரபினர் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்த்திட ஜீன் 11ம் தேதி அன்று சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது;
அரியலூர் மே.29- சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளின் விவரம் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை . இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி சீர்மரபினர் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்த்திட ஜீன் 11ம் தேதி அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2. மணி வரை அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான தகுதிகள்: சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருத்தல் வேண்டும், (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், முகாமிற்கு எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், மேற்படி இந்நலவாரியத்தில் தகுதியுடைய நபர்கள் மேற்படி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்