கோவை: 11 அடி பாம்பு செங்கல் சூளையில் உலா – பீதி அடைந்த மக்கள் !
கோவை அருகே கணுவாயில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள மலைப்பாம்பு உலாவியது. இதைக் கண்ட மக்கள் பயந்துபோய் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.;
கோவை அருகே கணுவாயில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள மலைப்பாம்பு உலாவியது. இதைக் கண்ட மக்கள் பயந்துபோய் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், பாரஸ்ட் ஹார்ட் பவுண்டேஷனின் சாந்தகுமாரை அழைத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பத்திரமாக பிடித்து மாங்கரை வனப்பகுதியில் விடுவித்தார். இத்தகைய வனவிலங்குகள் குறித்து உடனடியாக தகவல் வழங்க வேண்டும் என்றும், விலங்குகளை தாக்க வேண்டாம் எனவும் வனத்துறை மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் வழங்கியது.