ராசிபுரத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் 11 வது வாரம் திருக்குறள் சொல்லும் தமிழ்நாடு வெல்லும் .
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் 11 வது வாரம் திருக்குறள் சொல்லும் தமிழ்நாடு வெல்லும் .;
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டமான திருக்குறள் திருப்பணிகள் திட்டம் - தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இராசிபுரம் தமிழ் கழகத்தின் வாயிலாக 12 ஆவது வாரமாக நடந்து வருகிறது. இன்று 12 ஆவது வார திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தில் தலைமை ஏற்று பள்ளித் துணை ஆய்வாளர் இராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் முனைவர் கை. பெரியசாமி தலைமை உரையாற்றினார். அதில் திருக்குறள் ஒப்புயர்வற்ற உலகியல் நூல்bசாதி, மத, நாடு மொழி வேற்றுமை கடந்த உலக பொது நூல், உலகியல் நெறியை அகம் புறம் என்று வகுத்து அவற்றுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழுக்கும் தமிழனுக்குந்தான் உண்டு. அவ்விலக்கணங்களுக்கு ஏற்ற இலக்கியமாக தமிழனுடைய உயர்ந்த குறிக்கோளின் சிகரமாய் விளங்குவது உலக மகா கவி இயற்றிய பொதுமறையாகிய திருக்குறள். தமிழரின் தலை நிமிர்ந்த வாழ்விற்கு உயிர்நாடியாய் விளங்குவது அருமை திருக்குறளே ஆகும். "தருமர் ,மணக்குடவர் தச்சர் ,பரிமேலழகர் பரிதி ,திருமலையார் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் மூற்கு எல்லையுரை கண்டார் இவர். என்று திருக்குறளின் பெருமையைப் பேசி உரையாற்றினார். மேலும் திருக்குறள் போற்றுதும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக நிகழ்ச்சிக்கு இராசிபுரம் தேசிய மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் . பாபு,இணைச்செயலாளர் மா. இருசப்பன் , செல்வி ஶ்ரீலோஷினி முன்னிலை வகித்தார். வருகை புரிந்தவர்களைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கு. பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி முனைவர் கவிதா சங்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இதுவரை கற்ற 24 அதிகாரத்திற்குமான சிறு தேர்வு வைக்கப்பட்டது. அதில் பங்கேற்ற சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் பரிசுப்பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இச்சிறப்பு நிகழ்வில் பாரதிதாசன் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் நகராட்சி தொடக்கப்பள்ளி கோனேரிப்பட்டி மாணவ மாணவியர்கள் இராசிபுரம் எஸ் ஆர் வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய மகளிர் மேல்நிலைப் பள்ளி,மாணவிகள் கலந்து கொண்டனர்.இன்றைய அதிகாரமான 35. துறவு 36, மெய்யுணர்தல். இரண்டினையும் முதன்மை கருத்தாளர்களான திருவாளர் மதிப்பூர் முனைவர் பி தட்சிணாமூர்த்தி வாகை திரு மனோஜ் குமார் , SRV பெண்கள் பள்ளியின் காமாட்சி தமிழாசிரியர், சத்தியபிரியா தமிழாசிரியர் மற்றும் தமிழ் கழகம் சுதாகரன் ஆகியோர் குழந்தைகளின் மனநிலை அறிந்து எளிய செயல்பாடுடன் கற்றலை மேம்படுத்தி சிறப்பாக திருக்குறளைக் கற்பித்தனர். இராசிபுரம் எஸ் ஆர் வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தவப்பிரியா ஒன்பதாம் வகுப்பு மாணவி, ரமா பதினோராம் வகுப்பு மாணவிஇருவருக்கும் சிறப்பு பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டது திருக்குறளைக் கற்றுக் கொள்ளும் இன்றைய பயிற்சிபெறுநர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கிற போதும் விடைபெறும் பொழுதும் ஆளுக்கு ஒரு திருக்குறளை சொல்லி பின்பு அந்த நிகழ்வை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.குழந்தைகள் தாழ் தல கரும்பலகையில் எழுதி சுயமாய்க் கற்றனர். இன்றைய திருக்குறளில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக இராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் வீ . ரீகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.