இந்திய இராணுவப்படையின் 110வது காலாட்படை பிரிவின் 75 வது பவள விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

கோடாங்கிபாளையம் ஊராட்சி சார்பாக நடைபெற்றது

Update: 2024-09-17 08:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய இராணுவப்படையில் காலாட்படை பிரிவு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இந்திய இராணுவப்படையின் 110வது காலாட்படை பிரிவு மற்றும் கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இந்த விழாவில் 110 வது காலாட்படை கோவை பிரிவின் தளபதி ஹரீஷ் ராமச்சந்திரன்,துணை தளபதி விக்ரம் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.இந்த விழாவில் கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News