தஞ்சாவூர் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

ரேஷன் அரிசி;

Update: 2025-04-18 16:36 GMT
தஞ்சாவூர் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா மேற்பார்வையில், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பாப்பாநாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும்  தேவேந்திரன் மகன் செந்தில் (வயது 37) வந்து கொண்டிருந்தார்.  அவரை பிடித்து விசாரணை  மேற்கொண்டனர். மேலும் அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.   இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பாப்பாநாடு, சோழகன் குடிக்காடு, ஆம்பலாப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காகவும், மீன் பண்ணைகளுக்கு விற்பதற்காகவும் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. மேலும், அவர் ரேஷன் அரிசி வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் செந்திலின் வீட்டிற்கு சென்று  சென்று பார்த்தனர். அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News