ஜெயங்கொண்டத்தில் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

ஜெயங்கொண்டத்தில் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-09-15 13:05 GMT
ஜெயங்கொண்டம், செப்.16- மறைந்த முன்னாள் முதல்வர்  அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஜெயங்கொண்டம் நகர அதிமுக சார்பில் நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செல்வராஜ் தலைமையில் நான்கு ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று திருச்சி சாலை அண்ணா சிலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட அவைதலைவருமான ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணைச் செயலாளர் அறிவு (எ)சிவசுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் ஜெ.கெ.சிவா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜாரவி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கே.எஸ்.தேவா, ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், விக்ரமபாண்டியன்  உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கம் ஐம்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழகம் முன்பாக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அண்ணா தொழிற்சங்க பணிமனை செயலாளர் சோழராஜன் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.  இதில் செயலாளர் சின்னதுரை மற்றும் பொருளாளர் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.

Similar News