உன்னிக்காய்ச்சல் 12 பேருக்கு பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னிக்காய்ச்சல் பரவல் வேகமடைந்து ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு - தற்போது 4 பேருக்கு சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னிக்காய்ச்சல் பரவல் வேகமடைந்து ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாத துவக்கத்தில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த இருவர் இறந்தனர். இதுவரை கிராம பகுதிகளில் பரவிய இக்காய்ச்சல் திண்டுக்கல் நகர் பகுதியான நாயக்கர் புதுத்தெருவில் உள்ள 45 வயது ஆண் ஒருவருக்கு வந்துள்ளது. தற்போது உன்னிக்காய்ச்சலால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.