கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளூர் சிலைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நண்பகல் 12 மணி வரை இயக்கப்படுகிறது. அதன் பிறகு கண்ணாடி பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு படகு போக்குவரத்து அன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை பூம்புகார் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.