முன் விரோதத்தில் கோஷ்டி மோதல்: 12 பேர் காயம் விக்கிரவாண்டி அருகே பதற்றம்

முன் விரோதத்தில் கோஷ்டி மோதல்: 12 பேர் காயம்;

Update: 2025-01-30 05:21 GMT
முன் விரோதத்தில் கோஷ்டி மோதல்: 12 பேர் காயம் விக்கிரவாண்டி அருகே பதற்றம்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு,52; தி.மு.க., ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர். இவரது மனைவி விசாலாட்சி, ஊராட்சி மன்றத் தலைவி. வேலுவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க., ஒன்றிய துணை செயலாளர் சதீஷ்குமார்,35, என்பவருக்கும் தேர்தல் முன் விரோதம் உள்ளது.இந்நிலையில், அக்கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பது தொடர்பாக, டி.ஆர்.ஓ., பார்வையிட்டு சென்றுள்ளார்.ஜன., 26ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் சதீஷ்குமார், 'ஊர் மக்களை கேட்காமல் இடத்தை கையகப்படுத்த வருவாய் துறையினரை ஏன் அழைத்தீர்கள்' என கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று ஊராட்சி மன்ற தலைவியின் மகன்விசு,30; சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று, 'ஏன் நீ அடிக்கடி கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்கிறாய்' என கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து, இரு தரப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.இதில் விஷ்வா,29, என்பவருக்கு தலையில் கத்தி வெட்டு விழுந்தது. மேலும் ஆறுமுகம் மகள் அபிநயா,14, உட்படஇரு தரப்பை சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .புகாரில் விக்கிரவாண்டி போலீசார், இரு தரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

Similar News