புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, நேற்று முன்தினம் ஆங்காங்கே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்று சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 350-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.