ஓசூர் அருகே 12 யூனிட் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்.
ஓசூர் அருகே 12 யூனிட் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி மேம்பால சர்வீஸ் சாலையில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற இரண்டு லாரிகளை சோதனையிட்ட போது அதில் 12 யூனிட் மண் அனுமதி இன்றி கடத்தி வரப்பட்டது தெரிய வந் தது. இது பற்றி அதிகாரி பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.