அரசு வேலை 12 பேரிடம் 36 லட்ச ரூபாய் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக கோரி 12 பேரிடம் 36 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் மனு நாள் நடைபெற்றது. அதில் பழனி வட்டம் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பாலசமுத்திரம், உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மோசடியால் பாதிக்கப்பட்ட 12 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட பொருளாளராக பதவி வைக்கும் மாதவதுரை என்பவர் தனக்கு தற்போதுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை செல்வாக்கு இருப்பதாக கூறி பழனி மலைக் கோயில், வேளாண் துறை, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். கடந்த 2023 மற்றும் 24 ஆண்டுகளில் மட்டும் 12 பேரிடம் 36 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இது சம்பந்தமாக பழனி தாலுகா, மற்றும் நகர காவல் நிலையங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை மனு கொடுத்தும் இதுவரை (இரண்டு ஆண்டு காலம்) கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக இருக்கும் மாதவன் துரையை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.