முத்தாண்டிக்குப்பத்தில் 12.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய நியாய விலை கட்டிடம் திறப்பு விழா
எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பேர்பெரியான் குப்பம் ஊராட்சி, முத்தாண்டிக் குப்பம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலை கட்டிடம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 12.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.இந்த நியாய விலை கடை கட்டிடத்தை நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன், விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் ஹரிகிருஷ்ணன், பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், காங்கிரஸ் கட்சி பண்ருட்டி வட்டாரத் தலைவர் மாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.