தேனியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
முகாம்;
தேனியில் நேதாஜி கட்டுமானம் மற்றும் சாலையோர வணிகர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம் மற்றும் வைகை ஐ கேர் ஆப்டிகல்ஸ் குவாலிட்டி கேர் டயாக்னாஸ்டின் சென்டர் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.திண்டுக்கல் மண்டலம் சார்பாக நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை சங்கத்தின் தலைவர் நாகராஜ் ,பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தேனி மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் தேனி மாவட்ட செயலாளர் சிவசங்கர் ஆகியோர் தலைமையிலும் , தேனி நகர தலைவர் அமாவாசை ,தேனி நகர செயலாளர் மோகன் பாபு , -தேனி நகர இணை செயலாளர் சையது இப்ராகிம் ,தேனி நகர துணை செயலாளர் மாரிச்சாமி ,தேனி நகர பொறுப்பாளர் கார்த்திக், தேனி நகர சங்க ஆலோசகர் பால்சாமி, தேனி நகர செய்தி தொடர்பாளர் நூர் முகமது, தேனி நகர நிர்வாக கமிட்டி சின்ராஜ் ,பாண்டி கலையரசன் ஆகியோர் முன்னிலையில் இந்த கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது .இந்த பரிசோதனை முகாமில் தீராத தலைவலி ,கண்பார்வை குறைபாடு ,மாறுகண்பரிசோதனை ,சர்க்கரை நோய் பரிசோதனை ,கண் நீர் அழுத்தம் பரிசோதனை உட்பட கண் சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது மேலும் இலவசமாக ரத்த பரிசோதனையும் பொதுமக்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது .இந்த பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்