மங்கலம்பேட்டை பேரூராட்சியின் 13 தெருக்களில் ரூ.1 கோடியே 41 லட்சத்தில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

Update: 2024-09-13 17:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழிகாட்டுதலின் படி, விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ட குளத்தார் தெரு, புது நெசவாளர் தெரு, வாணியர் தெரு, பழைய காலனி மற்றும் புதிய காலனி உள்ளிட்ட 13 தெருக்களில்,  நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார், உதவி பொறியாளர் அன்புகுமார்  முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இதில், மங்கலம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் செல்வம், துணை செயலாளர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம், 3-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்  நூருல்லா, அன்சாரி, முஸ்லிம் லீக் பிரமுகர் முஹம்மது சையது, பொறியாளர் சந்தோஷ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரங்கராமானுஜம், மவ்லவி ஹபீப் முஹம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News