புரட்சியாளர் அன்னல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை....*
புரட்சியாளர் அன்னல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை....*;

விருதுநகரில் டாக்டர் புரட்சியாளர் அன்னல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.... இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவதினமாக கடைபிடிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அவரது பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடிவருகின்றனர் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசால் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்று விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திமுக சார்பில் நடைபெற்ற டாக்டர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு வருவாய் மற்ற பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர் .சீனிவாசன், நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்ட மற்றும் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்