வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமில் 137 தெருநாய்களுக்கு விலங்கின நல வாரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 14 கிராமப்புற பகுதிகளில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-04-26 16:57 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முறையாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படாததால் அவ்வப்போது மனிதர்களையும், கால்நடைளையும் வெறி நாய்கள் கடித்து விடுகிறது. இதனை முற்றிலும் தடுத்திடும் பொருட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அனைத்து வித நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் R-A-I-N என்ற விலங்கின பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறாக வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 22.04.2025 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட கேகே நகர், அவ்வையார் நகர், சிலோன் காலனி, நியூ காலனி, வாசுகி தெரு, எம்.எம் நகர், வெங்கடாஜலபதி நகர் மற்றும் துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 23.04.2025 அன்றும், பங்களா ஸ்டாப், வெங்கடேசபுரம், அபிராமபுரம், மாவட்ட ஆட்சியரக சாலை மற்றும் கோல்டன் கேட்ஸ் பள்ளி பின்புறம் ஆகிய பகுதிகளில் 24.04.2025 அன்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (26.04.2025) பேரளி மற்றும் பீல்வாடி கிராமத்தில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில் 137 தெருநாய்களுக்கு விலங்கின நல வாரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது‌‌. தொடர்ந்து இதுபோன்று பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 14 கிராமப்புற பகுதிகளில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News