போக்குவரத்து போலீசார் சோதனை: 14 வாகனங்களுக்கு ரஅபராதம்!
தூத்துக்குடியில் கல்லூரி முன்பு போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை நடத்தி 14 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 20 அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடியில் கல்லூரி முன்பு போக்குவரத்து போலீசார் திடீர் சோதனை நடத்தி 14 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 20 அபராதம் விதித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ். வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாளை., ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையில் போக்குவரத்து காவல் துறையினர் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையில் 14 இரு சக்கர வாகனம் பிடிபட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.