கொடைரோடு டோல்கேட் அருகே 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல் கொடைரோடு டோல்கேட் அருகே 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்;

Update: 2025-07-11 20:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கொடைரோடு டோல்கேட் அருகில் குடிமை பொருள் குற்றப்புலன் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன், தலைமை காவலர்கள் கணேஷ், தினேஷ், காளிமுத்து இணைந்து பறக்கும் படை தனி வட்டாட்சியர் சக்திவேல் பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் சண்முகநாதன் ஆகியோர் சேர்ந்து திடீர் வாகன சோதனை மேற்கொண்டதில் விருதுநகரில் இருந்து நாமக்கல் செல்லும் போது கொடைரோடு டோல்கேட்டில் TATA Eicher வாகனத்திலிருந்து 13 டன் குருணையும் அதனுடன் சேர்ந்து ஒரு டன் ரேஷன் அரிசியும் இருந்தது. அதனைக் கைப்பற்றி வாகனத்தையும் குடிமை பொருள் பறக்கும் படையினர் குடிமை பொருள் புலனாய்வு காவல் ஆய்வாளரிடம் ஒப்பத்தனர். வாகனத்தில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன் மதுரை சுலைமான் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த சுரேஷ் மூவரையும் குடிமை பொருள் துறை காவல் ஆய்வாளர் மேற்கண்ட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News