ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 14 டன் எடையில் 17 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 14 டன் எடையில் 17 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

Update: 2024-09-02 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 14 டன் எடையில் 17 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை ஈரோடு மாவட்டம் சத்தி அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 12 டன் எடையுள்ள கல்லில் 17அடி உயரத்தில் 100008 சிவலிங்கள் வடிவமைக்பட்ட சிவலிங்கம் சிறப்பு பூஜைகள் செய்ப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக, சிவலிங்கத்தின் பீடம் மற்றும் லிங்கம் நிலைநிறுத்தும் பணியானது கிரேன் மூலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, பூ மாலை அணிவித்து சென்டைமேள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிவலிங்கம் பிரதிஷ்டை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இங்கு ஏற்கனவே, சிவன் அடியார்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Similar News