செம்படம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 14,610 பறிமுதல்.
செம்படம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 14,610 பறிமுதல்.;
செம்படம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 14,610 பறிமுதல். வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட செம்படம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் ஆய்வாளர் ஓம் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 5ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் செம்படம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்த சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட செம்படாம்பாளையத்தை சேர்ந்த சசி ராகுல், ராம் நகரை சேர்ந்த முருகானந்தம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல், முத்துராஜபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ், அண்ணா நகரை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 14,615-ஐ பறிமுதல் செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.