திருப்பூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருப்பூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல். 5 வடமாநில இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-08-31 11:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் ஐந்து வட மாநில இளைஞர்கள் கைது. திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆணையர். அணில் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது வீடு ஒன்றில் 15 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து  விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.இதனை தொடர்ந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகோர் மகானந்தா 26 பிங்கு பிபார் 20 சிபா மகானந்தா 32 சுப்ராட் பெரோ 21 நித்ய நந்தா போரிடா 26 என்ற 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News