பெருவிளையில் ரூ15 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம்
விஜய்வசந்த் எம்பி அடிக்கல்;

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சமுதாயம் நலக்கூட அமைத்து தர வேண்டும் என்று ஊர் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம் பி யிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது அதற்கான பூமி பூஜை இன்று 16-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய்வசந்த் எம்பி அவர்களுக்கு ஊர் சார்பில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், புகாரி, ஊர் தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.