சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து 15 நாள் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது

ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவியின் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து 15 நாள் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது;

Update: 2025-05-29 12:21 GMT
அரியலூர், மே.29 - சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து 15 நாள் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது.கரீப்பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யக் கூடிய பயிர்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வளர்ச்சி அடைந்த வேளாண் உத்திரவாத இயக்கம் தொடங்கியுள்ளது இந்த விழிப்புணர்வு இயக்கம் அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூலம் சுத்தமல்லி கிராமத்தில் இன்று தொடங்கியது இந்நிகழ்ச்சியில் தா.பழர் ஒன்றியத்தில் இப்பருவத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யக்கூடிய முருங்கை நெல் கடலை எள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் அதிக மகசூல் பெரும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் எடுத்துக் கூறினர் மேலும் திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் கோயமுத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்துகொண்டு அதிக மகசூல் மற்றும் சாகுபடி செலவு குறைந்த ராகங்கள் அதனை சாகுபடி செய்யும் முறை அதற்கான நீர் மேலாண்மை உர மேலாண்மை விற்பனை மேலாண்மை ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர் மேலும் சாகுபடிக்கு தேவையான இயற்கை சார்ந்த வேளாண் திரவ வடிவிலான உரங்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன நிகழ்ச்சியில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மேலும் 15 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு இயக்கம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் சுமார் 40 கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகளுக்கு அந்தந்த பகுதிகளில் கரீப்ப்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கான தொழில்நுட்பங்களை விளக்க உள்ளனர்

Similar News